சாராயம் விற்ற வாலிபர் கைது

திருமருகல் அருகே சாராயம் விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-07-05 17:16 GMT

திட்டச்சேரி:

திருக்கண்ணபுரம் போலீசார் ஆதலையூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆதலையூர் சுடுகாடு அருகே சாராயம் விற்ற ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கீழசன்னாநல்லூர் பாப்பா குளத்தெருவை சேர்ந்த முருகேசன் மகன் கார்த்திக் (வயது28) என தெரியவந்தது. மேலும் இவர் காரைக்கால் பகுதியில் இருந்து சாராயம் கடத்தி வந்து விற்பனை செய்து வருவது விசாரணையில் தெரியவந்தது. இது குறித்து திருக்கண்ணபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திக்கை கைது செய்து, அவரிடம் இருந்து 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்