டிராக்டரில் மணல் கடத்திய வாலிபர் கைது

டிராக்டரில் மணல் கடத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-10-10 18:16 GMT

ஆம்பூர் பாலாற்றில் இருந்து அதிகளவில் மணல் கடத்தப்படுவதாக திருப்பத்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணனுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இதைத் தொடர்ந்து அவரது உத்தரவின்பேரில் மாவட்ட தனிப்படை போலீசார் நேற்று ஆம்பூர் பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது கன்னிகாபுரம் தேசிய நெடுஞ்சாலையில் வந்த ஒரு டிராக்டரை மடக்கி சோதனை செய்தனர். இதில் பாலாற்றில் இருந்து மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து டிராக்டரை பறிமுதல் செய்த தனிப்படை போலீசார், ஆம்பூர் டவுன் போலீசில் ஒப்படைத்தனர். ஆம்பூர் டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து டிராக்டரை ஓட்டி வந்த கங்காபுரம் பகுதியை சேர்ந்த ராஜசேகர் (வயது 30) என்பவரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்