விவசாயியை கொல்ல வாளுடன் வீட்டிற்குள் நுழைந்த வாலிபர் கைது

தேவகோட்டையில் விவசாயியை கொல்ல வாளுடன் வீட்டிற்குள் நுழைந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-06-15 18:45 GMT

தேவகோட்டை

தேவகோட்டையில் விவசாயியை கொல்ல வாளுடன் வீட்டிற்குள் நுழைந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

விவசாயி

தேவகோட்டை அருகே உள்ளது வாகைக்குடி கிராமம் அந்த கிராமத்தைச் சேர்ந்தவர் கருப்பையா (வயது 65). விவசாயி அதே கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்த் (27). பிரபல ரவுடி. இவர் நேற்று முன்தினம் இரவு நீண்ட வாளுடன் கருப்பையா வீட்டு காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்தார். இவரை கண்டதும் கருப்பையா வீட்டின் கதவை பூட்டிக்கொண்டு போலீஸ் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார். இதை தொடர்ந்து வேலாயுதப்பட்டினம் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அப்போது போலீசை கண்டதும் ஆனந்த் மீண்டும் காம்பவுண்ட் சுவரில் ஏறி குதித்துள்ளார். குதித்தபோது அவரது இடதுகை உடைந்தது.

கைது

பின்னர் போலீசார் அவர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து தேவகோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு மாவு கட்டு போடப்பட்டது. பின்னர் அவரை தேவகோட்டை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.நீதிபதி மாரிமுத்து அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். கைது செய்யப்பட்ட ஆனந்த் சிவகங்கையில் 2 இளம் பயிற்சி டாக்டர்களை வெட்டி கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தார். தற்போது அவர் ஜாமீனில் வெளியே வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்