ரெயில்வே கேட்டை கடக்க முயன்ற வாலிபர் ரெயில் மோதி பலி

ரெயில்வே கேட்டை கடக்க முயன்ற வாலிபர் ரெயில் மோதி பலியானார்.

Update: 2022-05-31 18:44 GMT

ஜோலார்பேட்டை

வாணியம்பாடி ரெயில் நிலையம் அருகே புதூர் ரெயில்வே கேட் என்ற இடத்தில் நேற்று முன்தினம் சுமார் 35 வயது வாலிபர் ஒருவர் தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது காட்பாடியில் இருந்து ஜோலார்பேட்டை நோக்கி சென்ற ஏதோ ஒரு ரெயிலில் அடிபட்டு மயங்கி கிடந்தார். அவரை அங்கிருந்த பொது மக்கள் மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்றுவந்த அவர்சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து அவர் யார்?. எந்த ஊரை சேர்ந்தவர் என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்