விழுப்புரம் அருகே பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது

விழுப்புரம் அருகே பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டாா்.

Update: 2023-02-01 18:45 GMT

விழுப்புரம் கிழக்கு புதுச்சேரி சாலை பகுதியை சேர்ந்தவர் முருகன்பாபு மனைவி கவுதமி (வயது 34). இவர் கோலியனூர் கூட்டுசாலை அருகே இரும்பு கம்பெனி வைத்துள்ளார். இந்த கம்பெனியில் மதுரை மாவட்டம் போறையூர் தாலுகா சல்லுப்பட்டியை சேர்ந்த பெருமாள் மகன் சவுந்தரபாண்டியன் (29) என்பவர் கடந்த 8 மாதமாக வேலை செய்து வந்துள்ளார். அவரது நடவடிக்கை சரியில்லாததால் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு வேலையை விட்டு நிறுத்திவிட்டனர். அதிலிருந்து தனது சொந்த ஊருக்கு சென்ற சவுந்தரபாண்டியன், அடிக்கடி கவுதமியை செல்போனில் தொடர்புகொண்டு திட்டி வந்துள்ளார். சம்பவத்தன்று கவுதமியை சவுந்தரபாண்டியன் மீண்டும் செல்போனில் தொடர்புகொண்டு தகாத வார்த்தையால் திட்டி கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து விழுப்புரம் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து சவுந்தரபாண்டியனை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்