கத்தியை காட்டி பணம் பறித்த வாலிபர் கைது

ரத்தினபுரியில் கத்தியை காட்டி பணம் பறித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-11-09 18:45 GMT

ரத்தினபுரி

கோவை ரத்தினபுரி கண்ணப்பநகரை சேர்ந்தவர் வல்லரசு (வயது32), தொழிலாளி. இவர் ரத்தினபுரி அமரர் ஜீவானந்தம் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த வாலிபர் ஒருவர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து வல்லரசை மிரட்டி அவரிடம் இருந்த ரூ.600-யை பறித்து கொண்டு தப்பித்து சென்றார்.

இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வல்லரசுவிடம் பணம் பறித்தது ரத்தினபுரி பகுதியை சேர்ந்த மாணிக்கம் (24) என்பவரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்