வடவள்ளி பகுதியில் 2 வீடுகளில் திருடிய வாலிபர் சிக்கினார்

வடவள்ளி பகுதியில் 2 வீடுகளில் திருடிய வாலிபர் சிக்கினார்.

Update: 2022-12-10 18:45 GMT

வடவள்ளி

கோவை சோமையம்பாளையம் மாங்கல்யன் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் சங்கர் (வயது 46). இவர் கடந்த 2-ந் தேதி தனது குடும்பத்தினருடன் திருவண்ணாமலைக்கு சென்றார். பின்னர் கார்த்திகை தீப திருவிழா முடிந்து 7-ந் தேதி வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, வீட்டில் இருந்த வெள்ளி பொருட்கள், பணம் திருடப்பட்டிருந்தது.

இதுகுறித்து சங்கர் வடவள்ளி போலீசில் புகார் அளித்தார். இதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தினர். இதில், சங்கர் வீட்டில் திருடியது அதே பகுதியைச் சேர்ந்த தினேஷ்பாபு (29) என்பது தெரியவந்தது. மேலும் அவர் கல்வீரம்பாளையம் நிவாசா கார்டன் பகுதியைச் சேர்ந்த தீபா (40) என்பவரது வீட்டிலும் கைவரிசை காட்டியதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்