சிறுமி பலாத்கார வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
சிறுமி பலாத்கார வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் பார்த்திபன் (வயது 27). இவர்17 வயதுடைய சிறுமியை பாலியல் பலாத்கார செய்தார். இது தொடர்பான புகாரின் பேரில் பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ உள்ளிட்ட சட்டங்களின் கீழ் வழக்குப்பதிவு செய்து பார்த்திபனை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். பார்த்திபனை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிடுமாறு கலெக்டருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி பரிந்துரை செய்தார். அவரின் பரிந்துரையை ஏற்று பார்த்திபனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் கற்பகம் நேற்று உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து பார்த்திபனை குண்டர் சட்டத்தில் கைது செய்ததற்கான உத்தரவின் நகலை பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீசார் திருச்சி மத்திய சிறை உயர் அதிகாரிகளிடம் வழங்கினர். பார்த்திபனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய சிறப்பாக பணிபுரிந்த பெரம்பலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் கலா, ஏட்டு பார்வதி ஆகியோரை போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி பாராட்டினார்.