நிலக்கோட்டை அருகே விபத்தில் வாலிபர் சாவு

நிலக்கோட்டை அருகே விபத்தில் வாலிபர் இறந்துபோனார்.

Update: 2023-04-09 21:00 GMT

நிலக்கோட்டை அருகே உள்ள எஸ்.மேட்டுப்பட்டியை சேர்ந்த கண்ணன் மகன் முத்துகிருஷ்ணன் (வயது 25). சம்பவத்தன்று இவர், எஸ்.மேட்டுப்பட்டியில் நடந்த கோவில் திருவிழாவுக்காக பொருட்கள் வாங்க அணைப்பட்டிக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து முத்துகிருஷ்ணன் எஸ்.மேட்டுப்பட்டிக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்து கொண்டிருந்தார். அணைப்பட்டியை அடுத்துள்ள 10 கண் பாலம் பகுதியில் அவர் வந்தபோது, சாலையோர பள்ளத்தில் நிலைதடுமாறி மோட்டார் சைக்கிளுடன் விழுந்தார்.

இதில், படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து அவர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் முத்துகிருஷ்ணன் உயிரிழந்தார். இதுகுறித்து நிலக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மயில்ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்