கை குழந்தையுடன் இளம் பெண் தர்ணா போராட்டம்

போலி பத்திரப்பதிவை ரத்து செய்யக்கோரி கை குழந்தையுடன் இளம் பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

Update: 2022-12-26 17:50 GMT

திருப்பத்தூர் இரட்டைமலை சீனிவாசன் பேட்டை பகுதியை சேர்ந்தவர் கேத்தரின்ஜார்ஜனா. 1-வது வார்டு முன்னாள் அ.தி.மு.க. கவுன்சிலர். இவருக்கு ஆலிஸ்அக்சிலியா, எவாஞ்சலின் ரோஷினி ஆகிய இரண்டு மகள்கள் உள்ளனர். அவர்களில் ஆலிஸ் அக்சிலியா வேறுமதத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவரது தந்தை லியோ பிரான்சிஸ் கொரோனாவில் இறந்துவிட்டார்.

அதைத்தொடர்ந்து கேத்தரின் ஜார்ஜினா வாரிசு சான்றிதழ் பெற்று அதில் ஆலிஸ்அக்சிலியா பெயரை நீக்கி போலியாக வாரிசு சான்றிதழ் தயார் செய்து, அவர்களுக்கு சொந்தமான ஐந்து ஏக்கர் நிலத்தை பத்திரப்பதிவு செய்து தனியார் வங்கியில் ரூ.30 லட்சம் கடன் பெற்றுள்ளார்.

இதனையறிந்த மூத்த மகள் அலிஸ் ஆக்சிலியா மாவட்ட சார்பதிவாளர் அலுவலகத்தில் புகார் செய்தார். மாவட்ட பதிவாளர் விசாரணை நடத்தியதில் கேத்தரின் ஜார்ஜினா போலி பத்திரப்பதிவு செய்தது தெரிய வந்தது. இந்த பத்திரப்பதிவை ரத்து செய்ய வேண்டும் என அலிஸ் ஆக்சிலியா மனு அளித்தார். ஆனால் மனு மீது நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் மாவட்ட பதிவாளர் அலுவலகம் முன்பு கைக் குழந்தையுடன் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார். அவரை மாவட்ட பதிவாளர் பிரகாஷ் அழைத்து விசாரணை நடத்தினார். அப்போது வருகிற 9-ந் தேதி அனைவருக்கும் சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை நடைபெறும். அன்று விசாரணைக்கு கேத்தரினாஜார்ஜினா, எவாஞ்சலின்ரோஷினி, விசாரணைக்கு வரவில்லை என்றால் 13-ந் தேதி பத்திரப்பதிவு ரத்து செய்யப்படும் என தெரிவித்தார். இதனை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்