கணவரோடு வாழ விருப்பம் இல்லை: தாலியை கழட்டி வைத்து விட்டு 39 வயது பெண்ணுடன் ஓட்டம் பிடித்த இளம்பெண்..!
கணவரோடு சேர்ந்து வாழ விருப்பம் இல்லை என்று தாலியை கழட்டி வைத்ததுடன் கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு பெண் இன்னொரு பெண்ணுடன் மாயம் இரண்டு பெண்களையும் போலீசர் தேடி வருகின்றனர்.
கொண்டலாம்பட்டி,
சேலம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள அரச மரத்து கரட்டூரை சேர்ந்தவர் தாமோதரன் இவரது மனைவி கௌசல்யா (வயது 25) இவர்கள் இருவருக்கும் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் ஆகியதாகவும் இந்த நிலையில் அதே ஊரைச் சேர்ந்த சேகர் என்பவரின் மனைவி மணிமேகலா (வயது 39 )என்பவருடன் நேற்று முன்தினம் மாயமாகிவிட்டார் கௌசல்யா வீட்டை விட்டு செல்வதற்கு முன்பாக கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு கணவரோடு வாழ விருப்பம் இல்லை என்று கூறிவிட்டு மணிமேகலாவுடன் சென்றதாகவும் தாலி கயிறை கழட்டி கடிதத்துடன் கட்டில் மீது வைத்துவிட்டு மாயமாகிவிட்டார். மேகலாவுக்கு மூன்று குழந்தைகள் உள்ள நிலையில் கௌசல்யாவுடன் மாயமாகியது அதிர்ச்சி தகவலாக உள்ளது.
இதுகுறித்து கொண்டலாம்பட்டி போலீசில் கௌசல்யாவின் கணவர் தாமோதரன் தனது மனைவி கடிதம் எழுதி வைத்துவிட்டு இன்னொரு பெண்ணுடன் மாயமாகிவிட்டதாக புகார் தெரிவித்தார். அந்த புகாரின் பேரில் கொண்டலாம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி கௌசல்யாவை தேடி வருகின்றனர்.
இளம்பெண் ஒருவர் 39 வயது பெண்ணுடன் ஓட்டம் பிடித்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.