ஓடும் ரெயிலில் இருந்து இறங்கிய வாலிபர் தவறி விழுந்து பலி
அரக்கோணத்தில் ஓடும் ரெயிலில் இருந்து இறங்கிய வாலிபர் தவற விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
அரக்கோணம்
சென்னையில் இருந்து மங்களூரு செல்லும் விரைவு ரெயில் நேற்று மாலை 5.30 மணிக்கு அரக்கோணம் ரெயில் நிலையத்திற்கு வந்தது. இந்த ரெயில் அரக்கோணத்தில் நிறுத்தம் இல்லாததால் பிளாட்பாரத்தை கடந்து சென்றது.
அப்போது ரெயிலில் பயணம் செய்த சோளிங்கர் பகுதியை சேர்ந்த கேட்ரிங் வேலை செய்து வரும் குமரேசன் (வயது 25) என்பவர் ஓடும் ரெயில் இருந்து இறங்கிய போது தவறி விழுந்ததில் ரெயிலின் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த அரக்கோணம் ரெயில்வே போலீசார் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.