தாயாரை, தந்தை திட்டியதால் மனமுடைந்த வாலிபர் தற்கொலை

தாயாரை, தந்தை திட்டியதால் மனமுடைந்த வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-05-29 16:55 GMT

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம் அம்மூர் அருகில் உள்ள மேல்வேலம் கிராமத்தைச் சேர்ந்தவர் பூபாலன். இவரின் மகன் தினேஷ் (வயது 22). பூபாலன் தனது மனைவியை திட்டியதாக கூறப்படுகிறது.

இதைப் பார்த்து பொறுக்க முடியாத தினேஷ் மனவேதனையில் எலி மருந்து பிஸ்கட்டை சாப்பிட்டு விட்டு வீட்டில் மயக்கமடைந்து கிடந்தார். அவரை, குடும்பத்தினர் மீட்டு வாலாஜாவில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி தினேஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து ராணிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்