தற்கொலைக்கு முயன்ற இளம்பெண் சிகிச்சை பலனின்றி சாவு
திருவண்ணாமலை அருகே சாதி சான்றிதழ் இல்லாததால் தற்கொலைக்கு முயன்ற இளம்பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
திருவண்ணாமலை அருகே சாதி சான்றிதழ் இல்லாததால் தற்கொலைக்கு முயன்ற இளம்பெண் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
சாதி சான்றிதழ்
திருவண்ணாமலை அருகே எடப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவரது மகள் ராஜேஸ்வரி (வயது 17). இவர் பிளஸ்-2 முடித்து விட்டு கல்லூரி படிப்பிற்காக பல்வேறு கல்லூரியில் சேருவதற்காக விண்ணப்பித்து உள்ளார்.
இவரிடம் குறிப்பிட்ட சாதிக்கான சான்றிதழ் இல்லாததால் ராஜேஸ்வரியால் கல்லூரியில் சேர முடியாத நிலை ஏற்பட்டது.
இதனால் அவருடன் பள்ளியில் படித்த மாணவிகள் கல்லூரியில் சேர்ந்த நிலையில் அவரால் கல்லூரியில் சேர முடியாததால் விரக்தி அடைந்தார்.
விஷம் குடித்தார்
இந்த நிலையில் கடந்த 17-ந் தேதி வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் ராஜேஸ்வரி விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ள முயன்றார்.
மயக்க நிலையில் கிடந்த அவரை பார்த்து ெபற்றோர் அதிர்ச்சி அடைந்தனா்.
பின்னர் அவரை சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் திருவண்ணாமலை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.