காதல் திருமணம் செய்த இளம்பெண் கிணற்றில் குதித்து தற்கொலை

வாணியம்பாடி அருகே காதல்திருமணம் செய்த இளம்பெண், கணவன் மற்றும் குழமந்தைகள் கண் முன்னே கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2023-05-08 18:19 GMT

காதல் திருமணம்

நாட்றம்பள்ளியை அடுத்த சாமகவுண்டனூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி சரளா (வயது 23) இவர்கள் இருவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் நேற்று வாணியம்பாடியை அடுத்த நிம்மியம்பட்டு கிராமம் அருகே உள்ள கலர் வட்டத்தில் சரளாவின் அக்காள் அஞ்சலி என்பவரது வீட்டிற்கு குடும்பத்துடன் வந்துள்ளனர்.

பின்னர் நேற்று மாலை 4 மணி அளவில் மீண்டும் சொந்த ஊரான சாமகவுண்டனூருக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றனர். அப்போது வழியில் ராணிப்பேட்டை பாலகிருஷ்ணன் என்பவரது நிலம் அருகே வரும்போது சிறுநீர் கழிப்பதாக கூறிவிட்டு சரளா இறங்கி சென்றார்.

கிணற்றில் குதித்து தற்கொலை

அப்போது திடீரென கணவன் மற்றும் அவரது இரண்டு குழந்தைகள் கண் முன்னே அருகே இருந்த கிணற்றில் குறித்தார். இதனைக் கண்ட ராஜா அதிர்ச்சி அடைந்து கூச்சலிடவே அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். அவர்கள் ஆலங்காயம் தீணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர்.

தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து கிணற்றில் குறித்த சரளாவை பிணமாக மீட்டனர். இது குறித்து ஆலங்காயம் போலீசார் வழக்குப் பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்