குளத்தில் பிணமாக மிதந்த இளம்பெண்

இரணியல் அருகே குளத்தில் இளம்பெண் பிணமாக மிதந்தாள். அவர் சாவில் சந்தேகம் இருப்பதாக தாயார் புகார் செய்ததன்பேரில் விசாரணை நடந்து வருகிறது.

Update: 2023-05-02 18:45 GMT

திங்கள்சந்தை:

இரணியல் அருகே குளத்தில் இளம்பெண் பிணமாக மிதந்தாள். அவர் சாவில் சந்தேகம் இருப்பதாக தாயார் புகார் செய்ததன்பேரில் விசாரணை நடந்து வருகிறது.

குளத்தில் இளம்பெண் பிணம்

இரணியல் அருகே உள்ள குருந்தன்கோட்டை அடுத்த தாழத்துவிளையை சேர்ந்தவர் ராஜேஷ், கட்டிட தொழிலாளி. இவருக்கும், வடசேரி ஓட்டுப்புரை தெருவை சேர்ந்த ஜெயவேல்-கமலம் தம்பதி்யின் மகள் சித்ரா (வயது 37) என்பவருக்கும் 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு குழந்தை இல்லை.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை அப்பகுதியில் உள்ள காடேற்றி குளத்திற்கு சித்ரா குளிக்க சென்றார். சிறிது நேரம் கழித்து அந்த வழியாக சென்றவர்கள் ஒரு பெண் குளத்தில் மிதப்பதை பார்த்தனர். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு நெய்யூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் சித்ரா ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார்கள்.

சாவில் சந்ே்தகம் இருப்பதாக புகார்

இது குறித்து தகவல் அறிந்ததும் சித்ராவின் தாயார் கமலம் அலறியடித்துக்கொண்டு சம்பவ இடத்துக்கு வந்து மகளின் உடலை பார்த்து கதறி அழுதார். பின்னர் அவர் தனது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக இரணியல் போலீஸ் நிலையத்தில் புகார் ெசய்தார்.

அதன்பேரில் குளச்சல் துணை ே்்பாலீஸ் சூப்பிரண்டு தங்கராமன், இரணியல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துகிருஷ்ணன் உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு நேரில் வந்து விசாரணை நடத்தினார்கள். அதைத்தொடர்ந்து தனியார் ஆஸ்பத்திரியில் இருந்த சித்ராவின் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனைக்கு பின்னர் தான் சித்ரா எப்படி இறந்தார் என்பது தெரியவரும் என்று ே்பாலீசார் தெரிவித்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

உதவி கலெக்டர் விசாரணை

இதுபற்றி பத்மநாபபுரம் உதவி கலெக்டர் கவுசிக் விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்