தீயில் கருகி இளம்பெண் பலி
பகண்டை கூட்டுரோடு அருகே தீயில் கருகி இளம்பெண் பலி
ரிஷிவந்தியம்
பகண்டை கூட்டுரோட்டு அருகே உள்ள மையனூர் கிராமத்தை சேர்ந்தவர் மத்தேயு மகள் டெனிஷா நாயகி(18). இவர் மூளை வளர்ச்சி இல்லாமல் மனநலம் குன்றிய நிலையில் உள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் டெனிஷா நாயகியை அவரது பெற்றோர் வீட்டில் விட்டுவிட்டு சங்கராபுரம் சென்றனர். அப்போது டெனிஷா நாயகி சாலையோரம் கிடந்த தீப்பெட்டியை எடுத்து பற்ற வைத்தபோது எதிர்பாராதவிதமாக அவரது உடையில் தீப்பிடித்து கொண்டது. இதனால் வெப்பம் தாங்க முடியாமல் அவர் கூச்சலிட்டார். இந்த சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் பகண்டை கூட்டு ரோடு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.