பழனியில் மஞ்சப்பை ஏ.டி.எம். திறப்பு

பழனியில் மஞ்சப்பை ஏ.டி.எம். திறக்கப்பட்டுள்ளது.

Update: 2023-01-25 17:21 GMT

பழனி நகராட்சி சார்பில், பிளாஸ்டிக், பாலித்தீன் பை பயன்பாட்டை குறைக்கும் வகையில் மஞ்சப்பை வழங்கும் தானியங்கி எந்திரம் (ஏ.டி.எம்.) பழனி பஸ் நிலைய பகுதியில் நிறுவப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. இதில் நகராட்சி தலைவர் உமா மகேஸ்வரி, ஆணையாளர் கமலா, நகர்நல அலுவலர் மனோஜ்குமார் மற்றும் அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, 10 ரூபாய் நோட்டு, நாணயம் ஆகியவற்றை எந்திரத்தில் செலுத்தி மஞ்சப்பை பெற்றுக்கொள்ளலாம். இதில் 500 பைகளை வைக்கமுடியும். இதன் மூலம் பிளாஸ்டிக் பாலித்தீன் பைகள் பயன்பாடு தவிர்க்கப்படும் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்