கஞ்சா செடி வளர்த்த தொழிலாளி கைது

ஜோலார்பேட்டை அருகே கஞ்சா செடி வளர்த்த தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

Update: 2023-10-07 18:51 GMT

ஜோலார்பேட்டை

ஜோலார்பேட்டையை அடுத்த பெரிய மூக்கனூர் பெருமாள் கோவில் பின்புறம் வசித்து வருபவர் பன்னீர் (வயது 53). பீடி தொழிலாளியான இவர் வீட்டின் பின்புறம் 3 கஞ்சா செடிகளை வளர்த்து வந்துள்ளார்.

இதனை அறிந்த அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் உடனடியாக திருப்பத்தூர் மாவட்ட போலீ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜானுக்கு ரகசிய தகவல் அளித்தார்.

இதனையடுத்து பன்னீர்வீட்டை சோதனை செய்ய போலீஸ் சூப்பிரண்டு ஆல்பர்ட் ஜான் உத்தரவிட்டார். உடனடியாக பன்னீர் வீட்டுக்கு ஜோலார்பேட்டை போலீசார் விரைந்து சென்றனர்.

வீட்டின் பின்புறம் சென்று பார்த்தபோது 3 கஞ்சா செடிகள் இருந்ததை பிடுங்கி பன்னீரை ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.

விசாரணையில் கஞ்சா செடிகள் வளர்த்து வந்தது ஒப்புக்கொண்டார் இதனையடுத்து அவரை இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி மற்றும் போலீசார் கைது செய்து திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்