மனைவியை தாக்கிய தொழிலாளிக்கு ஒரு வருடம் சிறை
மனைவியை தாக்கிய தொழிலாளிக்கு ஒரு வருடம் சிறை தண்டனை விதித்து பூதப்பாண்டி கோர்ட்டு உத்தரவிட்டது.
அழகியபாண்டியபுரம்:
மனைவியை தாக்கிய தொழிலாளிக்கு ஒரு வருடம் சிறை தண்டனை விதித்து பூதப்பாண்டி கோர்ட்டு உத்தரவிட்டது.
ஆரல்வாய்மொழி அருகே உள்ள சண்முகபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜகோபால் (வயது 60), கூலி தொழிலாளி. இவருடைய மனைவி சரஸ்வதி (55). கணவன், மனைவி இடையே திடீரென தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ராஜகோபால், சரஸ்வதியை தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த சரஸ்வதி இதுகுறித்து ஆரல்வாய்மொழி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த சம்பவம் கடந்த 2013-ம் ஆண்டு நடந்தது. மேலும் இதுதொடர்பான வழக்கு பூதப்பாண்டி கோர்ட்டில் நடந்து வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி கார்த்திகேயன் நேற்று தீர்ப்பு கூறினார். அதில், ராஜகோபாலுக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.