பெண்ணை தாக்கிய கணவர் மீது வழக்கு
கரிவலம்வந்தநல்லூர் அருகே மனைவியை தாக்கிய கணவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
சங்கரன்கோவில்:
தென்காசி மாவட்டம் கரிவலம்வந்தநல்லூர் அருகே உள்ள வயலிமிட்டா கிராமத்தைச் சேர்ந்தவர் சண்முகையா பாண்டியன் மகன் மணிகண்டன் (வயது 30). கூலி தொழிலாளி. இவருடைய மனைவி ராமலட்சுமி (25). இந்த நிலையில் மணிகண்டன் அடிக்கடி மது குடித்து விட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.
சம்பவத்தன்று மணிகண்டன் மதுபோதையில் வந்து மனைவி ராமலட்சுமியிடம் தகராறு செய்து அவரை தோசைக்கல்லால் தாக்கி உள்ளார். இதில் காயம் அடைந்த ராமலட்சுமி சிகிச்சைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து ராமலட்சுமி கொடுத்த புகாரின் பேரில், கரிவலம்வந்தநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை வலைவீசி தேடி வருகிறார்கள்.