விபத்தில் தனியார் நிறுவன தொழிலாளி பலி
விபத்தில் தனியார் நிறுவன தொழிலாளி பலியானார்.
சாத்தூர் அருகே உள்ள ஓ.மேட்டுப்பட்டி பாண்டியன் நகரை சேர்ந்தவர் கமலக்கண்ணன் (வயது 36). இவர் விருதுநகரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று வேலை முடிந்து வீடு திரும்பும் போது தேசிய நெடுஞ்சாலையில் பாவாலி விலக்கு அருகே வாகன விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த இவரது மனைவி சேர்மாதேவி, தனது உறவினருடன் வந்து கமலக்கண்ணனை மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக ஆம்புலன்சில் கொண்டு சென்றனர். அப்போது வழியில் அவருக்கு மூச்சுதிணறல் ஏற்பட்டதால் கமலக் கண்ணனை திருமங்கலம் அரசுஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுபற்றி சேர்மாதேவி கொடுத்த புகாரின் பேரில் விருதுநகர் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.