நாகூர்
நாகூர் தேரடி தெரு மெயின் சாலையோரம் அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் இறந்துகிடப்பதாக நாகூர் போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவராமன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இறந்தவர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் மேலவாஞ்சூர் நேரு நகரை சேர்ந்த தொழிலாளி பாலாஜி (வயது 45) என்பது தெரியவந்தது. இதுகுறித்து நாகூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.