நடந்து சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு
நடந்து சென்ற பெண்ணிடம் நகை பறிக்கப்பட்டது.
ராமநாதபுரம் இந்திராநகர் பகுதியை சேர்ந்தவர் சுஸ்மிதா (வயது 25). தனியார் கோச்சிங் வகுப்பிற்கு சென்ற இவர் பஸ் நிறுத்தத்தில் இருந்து வீட்டிற்கு நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் தலைக்கவசம் அணிந்து வந்த மர்ம நபர் சுஸ்மிதா கழுத்தில் அணிந்திருந்த 1½ பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றார். இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த சுஸ்மிதா லேசான காயம் அடைந்தார். இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின்பேரில் ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.