புகையிலை பொருட்கள் விற்ற பெண் கைது
திசையன்விளை அருகே புகையிலை பொருட்கள் விற்ற பெண் கைது செய்யப்பட்டார்.
திசையன்விளை:
திசையன்விளை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரியராஜ்குமார் மற்றும் போலீசார் நேற்று திசையன்விளை அருகே மடத்தச்சம்பாட்டில் தாராசிங் மனைவி லலிதா (வயது 53) என்பவர் நடத்தி வரும் கடையில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, அங்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து, லலிதாவை கைது செய்தனர்.