காதல் திருமணம் செய்த பெண் தற்கொலை

காதல் திருமணம் செய்த பெண் தற்கொலை செய்து கொண்டனர்.

Update: 2023-08-15 21:37 GMT

திருச்சி சுப்ரமணியபுரம் பழைய பாண்டியன் தெருவை சேர்ந்தவர் மகேஸ்வரன். ஆட்டோ டிரைவர். இவரது மனைவி கார்த்திகா (வயது 32). இவர்கள் இருவரும் காதலித்து ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கார்த்திகா மனவிரக்தியில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் கார்த்திகா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மகேஸ்வரன் கொடுத்த புகாரின்பேரில் கே.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்