சேலத்தில் பயங்கரம்: கட்டையால் அடித்து பெண் படுகொலை கணவருக்கு போலீஸ் வலைவீச்சு

சேலத்தில் கட்டையால் அடித்து பெண்ணை படுகொலை செய்து விட்டு தலைமறைவான கணவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2022-10-12 20:44 GMT

அன்னதானப்பட்டி, 

தனியார் நிறுவன காவலாளி

சேலம் தாதகாப்பட்டி வேலு நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் ராஜசேகரன் (வயது 42). இவர் சேலத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி கார்த்திகை செல்வி (37). இவர் தையல் தொழில் செய்து வந்தார்.

இவர்களுக்கு பால சத்யா (10) என்ற மகள் உள்ளாள். கணவன், மனைவி இருவருக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 3 பேரும் வீட்டில் தூங்கினர். நள்ளிரவில் பால சத்யா கண் விழித்து உள்ளார். அப்போது தாயின் தலை, முகத்தில் ரத்தம் வழிந்து கொண்டிருப்பதை பார்த்த சிறுமி கதறி அழுதாள்.

போலீசார் விசாரணை

சிறுமியின் சத்தம் கேட்டு, அந்த பகுதியில் உள்ள சிலர் வீட்டிற்குள் சென்று பார்த்தனர். அப்போது கார்த்திகை செல்வி தலையில் பலத்த காயத்துடன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். வீட்டில் ராஜசேகரன் இல்லை.

இதுகுறித்து அவர்கள் அன்னதானப்பட்டி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கார்த்திகை செல்வியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் இந்த பயங்கர கொலை சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

ரீப்பர் கட்டையால் அடித்து கொலை

விசாரணையில் கணவர் ராஜசேகரனே அவரது மனைவியை ரீப்பர் கட்டையால் அடித்து படுகொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவான ராஜசேகரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

இது குறித்து போலீசார் கூறியதாவது:-

ராஜசேகரனுக்கு குடிப்பழக்கம் உள்ளது. இதனால் கணவன், மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் அவர்களுக்குள் நேற்று முன்தினம் மீண்டும் தகராறு ஏற்பட்டது. பின்னர் இரவு கார்த்திகை செல்வி தூங்கி உள்ளார்.

அதே நேரத்தில் ஆத்திரத்தில் இருந்த ராஜசேகரன் நள்ளிரவில் எழுந்து தூங்கிக்கொண்டிருந்த மனைவியின் தலை, முகத்தில் ரீப்பர் கட்டையால் சரமாரியாக அடித்து படுகொலை செய்து விட்டு தலைமறைவாகி உள்ளார்.

இருப்பினும் ராஜசேகரனை பிடித்தால் தான் குடும்ப பிரச்சினையால் மனைவியை கொலை செய்தாரா? அல்லது வேறு ஏதாவது காரணங்களால் கொலை செய்தாரா? என்பது குறித்து தெரியவரும்.

இவ்வாறு போலீசார் கூறினர்.

சேலத்தில் குடும்ப தகராறில் மனைவியை கணவர் ரீப்பர் கட்டையால் சரமாரியாக அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை A woman was beaten to death with a stickஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்