திருப்பதிக்கு பாதயாத்திரையாக சென்ற பெண் கிரேன் மோதி பலி
திருப்பத்தூர் அருகே திருப்பதிக்கு பாதயாத்திரையாக சென்ற பெண் கிரேன் மோதி பலியானார்.
தர்மபுரியை சேர்ந்தவர் கந்தசாமி. இவரது மனைவி சிவசங்கரி (வயது 52). இவர் சிலருடன் சேர்ந்து தர்மபுரியில் இருந்து திருப்பத்தூர் வழியாக திருப்பதிக்கு பாதை யாத்திரையாக சென்றார். நேற்று கிருஷ்ணகிரியில் இருந்து திருப்பத்தூர் செல்லும் சாலையில் சென்றபோது கிரேன் ஒன்று எதிர்பாராதவிதமாக சிவசங்கரி மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிவசங்கரி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து திருப்பத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.