மொபட்டில் சென்ற பெண்ணிடம் 4 பவுன் நகை பறிப்பு

ஜோலார்பேட்டை அருகே மொபட்டில் சென்ற பெண்ணிடம் 4 பவுன் நகையை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.

Update: 2022-12-02 18:36 GMT

ஜோலார்பேட்டை அருகே மொபட்டில் சென்ற பெண்ணிடம் 4 பவுன் நகையை மர்ம நபர்கள் பறித்து சென்றனர்.

செயின் பறிப்பு

ஜோலார்பேட்டை அருகே உள்ள புது ஓட்டல் தெரு பகுதியைச் சேர்ந்தவர் பூபாலன். அரசு போக்குவரத்து துறையில் செக்கிங் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி செல்வி (வயது 40). இவர் மொபட்டில் நேற்று இரவு திருப்பத்தூரில் இருந்து ஜோலார்பேட்டை நோக்கி வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். பக்கிரிதக்கா அடுத்த ஏலகிரி ஏரிக்கோடு அருகே சென்று கொண்டிருந்தபோது பின்னால் அடையாளம் தெரியாத 2 நபர்கள் மோட்டார் சைக்கிள் வந்தனர்.

அவர்கள் திடீரென செல்வி கழுத்தில் அணிந்து இருந்த நகையை பறித்தனர். இதில் செல்வி நிலை தடுமாறி கீழே விழுந்து காலில் அடிபட்டது. மேலும் செயினை பறித்ததில் கழுத்திலும் லேசான காயம் ஏற்பட்டு, மயங்கி கீழே விழுந்தார்.

போலீஸ் வலைவீச்சு

இதைபார்த்த அங்கிருந்த பொது மக்கள் கூச்சல் போடவே செயினை பறித்த மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் வாணியம்பாடி நோக்கி மின்னல் வேகத்தில் சென்றுவிட்டனர்.

இது குறித்து செல்வி ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து நகையை பறித்து சென்ற மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்