ஏற்காட்டில் ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம்-ஆண் குழந்தை பிறந்தது

ஏற்காட்டில் ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம் நடந்தது. இந்த பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது.

Update: 2022-09-11 21:32 GMT

ஏற்காடு:

ஏற்காடு பில்லேரி கிராமத்தை சேர்ந்தவர் ராம்குமார். இவருடைய மனைவி ராதிகா (வயது 25). இவர் கர்ப்பம் தரித்து இருந்தார். இந்த நிலையில் அவருக்கு நேற்று காலை பிரசவ வலி ஏற்பட்டது. உடனடியாக ராதிகா குடும்பத்தினர் அவரை வாழவந்தி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை சோதித்த டாக்டர்கள், ராதிகாவை 108 ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

108 ஆம்புலன்ஸ் சுக்கம்பட்டி அருகே சென்ற போது ராதிகாவுக்கு வலி அதிகமானதால் டிரைவர் கமலக்கண்ணன் ஆம்புலன்சை ரோட்டின் ஓரமாக நிறுத்தினார். பிறகு மருத்துவ உதவியாளர் சிகாமணி ராதிகாவுக்கு பிரசவம் பார்த்ததில் அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. அதன் பின்னர் தாய் மற்றும் குழந்தையை மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு தாய் மற்றும் சேய்க்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ஆம்புலன்சில் அவசர நிலை கருதி பிரசவம் பார்த்து தாய் மற்றும் குழந்தையை காப்பாற்றிய மருத்துவ உதவியாளர் சிகாமணி மற்றும் ஆம்புலன்ஸ் டிரைவர் கமலக்கண்ணனை, ராம்குமார் குடும்பத்தினர் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.

Tags:    

மேலும் செய்திகள்