அழுகிய நிலையில் பிணமாக மீட்கப்பட்ட பெண் கொலையா?

வாலாஜா அருகே அழுகிய நிலையில் பிணமாக மீட்கப்பட்ட பெண் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதனால் அவரை மோட்டார்சைக்கிளில் அழைத்து சென்ற நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2022-11-09 18:51 GMT

வாலாஜா அருகே அழுகிய நிலையில் பிணமாக மீட்கப்பட்ட பெண் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதனால் அவரை மோட்டார்சைக்கிளில் அழைத்து சென்ற நபர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அழுகிய நிலையில் பெண் பிணம்

வாலாஜா அடுத்த சாத்தம்பாக்கம் கிராமத்தில் வனத்துறைக்கு சொந்தமான இடத்தில் அழுகிய நிலையில் பெண் பிணம் கிடந்தது. இது குறித்து சாத்தம்பாக்கம் கிராம நிர்வாக அலுவலர் மஞ்சுளா வாலாஜா போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து சமீபத்தில் காணாமல் போன பெண்கள் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் காவேரிப்பாக்கம் போலீஸ் நிலையத்தில் ராமநாதபுரம் காலனி காந்தி தெருவை சேர்ந்த நாகராஜன் என்பவருடைய மகள் ரேஷ்மலதா (வயது 27) கடந்த மாதம் 22-ந் தேதி வாலாஜா அரசு மருத்துவமனைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் வீடு திரும்பவில்லை என புகார் செய்யப்பட்டிருந்தது.

கொலையா?

அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. அவருக்கு திருமணமாகி 5 மாத குழந்தை உள்ளது. கணவர் சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். சில மாதங்களுக்கு முன்பு தலை பிரசவத்திற்கு தாய் வீட்டிற்கு வந்த ரேஷ்மலதா குழந்தை பிறந்த நிலையில் தாய் வீட்டில் தங்கி இருந்தார்.

இந்த நிலையில் கடந்த மாதம் 22-ந் தேதி வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை என்பது தெரியவந்தது. வாலாஜா மற்றும் காவேரிப்பாக்கம் போலீசார் இணைந்து அகதிகள் முகாம் பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை சோதனைசெய்தபோது, ரேஷ்மலதாவை அடையாளம் தெரியாத வாலிபர் தனது மோட்டார்சைக்கிளில் அழைத்துச் செல்வது தெரியவந்தது.

இதனால் ரேஷ்மலதாவை அந்த நபர் அடித்து கொலை செய்துவிட்டு தப்பி சென்றிருக்கலாம் என கூறப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்