தீக்குச்சிகள் உராய்ந்து தீப்பிடித்ததில் பெண் பலி

பேரணாம்பட்டு அருகே தீக்குச்சிகள் உராய்ந்து தீப்பிடித்ததில் பெண் பரிதாபமாக உயிரிழந்தார். காப்பாற்ற முயன்ற அண்ணன் படுகாயம் அடைந்தார். 

Update: 2023-05-27 18:22 GMT

பேரணாம்பட்டு,

பேரணாம்பட்டு அருகே தீக்குச்சிகள் உராய்ந்து தீப்பிடித்ததில் பெண் பரிதாபமாக உயிரிழந்தார். காப்பாற்ற முயன்ற அண்ணன் படுகாயம் அடைந்தார். 

தீக்குச்சிகள் உராய்ந்து தீ விபத்து

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே உள்ள ஊசூரான்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முருகையன் (வயது 61). இவர், அதே கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் குடிசை தொழிலாக தீப்பெட்டி தயாரிக்கும் தொழில் செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று காலை 8.30 மணி அளவில் முருகையனும், அவரது தங்கை சுகுணாவும் (52) தீப்பெட்டி தயாரிக்கும் இடத்திற்கு வந்தனர். பின்னர் அங்கு சுத்தம் செய்வதற்காக அங்கிருந்த சிறிய அறையில் பழைய தீக்குச்சிகள் உள்ள மூட்டையை சுகுணா இழுத்து நகர்த்திய போது எதிர்பாராதவிதமாக தீக்குச்சிகள் உராய்ந்து திடீரென தீப்பற்றியது.

பெண் பலி

உடனே சுகுணாவின் ஆடையில் தீப்பற்றி கொழுந்துவிட்டு எரிந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த முருகையன், சுகுணாவை காப்பாற்ற முயன்றார். இதனால் அவரது உடலிலும் தீப்பற்றியது.

இவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் வசிக்கும் மக்கள் ஓடிச் சென்று, தீக்காயம் அடைந்த சுகுணா, முருகையன் ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சுகுணா பரிதாபமாக உயிரிழந்தார். முருகையன் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதற்கிடையில் இதுகுறித்து தகவல் அறிந்ததும் குடியாத்தம் தீயணைப்பு வீரர்கள சம்பவ இடத்துக்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து பேரணாம்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தன், காமராஜ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்