தஞ்சை மாவட்டம், திருக்காட்டுப்பள்ளியை சேர்ந்த வெங்கடேசனின் மனைவி மஞ்சுளா(வயது 40). இவர் சம்பவத்தன்று, தனது கணவருடன் ஒரு மோட்டார் சைக்கிளில் திருமானூரில் இருந்து அரியலூர் நோக்கி சென்று கொண்டிருந்தார். முடிகொண்டான் பஸ் நிலையம் அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக மஞ்சுளாவின் சேலை மோட்டார் சைக்கிளின் சக்கரத்தில் சிக்கியது. இதனால் அவர் நிலை தடுமாறி சாலையில் விழுந்தார்.இதில் மஞ்சுளாவிற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து தஞ்சை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து திருமானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.