விவசாய பயிர்களை சேதப்படுத்தும் காட்டுயானை

அழகுமலை, முருக்கடி பகுதியில் விவசாய தோட்டங்களுக்குள் புகுந்து பயிர்களை காட்டுயானை சேதப்படுத்துகிறது.

Update: 2023-04-22 19:00 GMT


கொடைக்கானல் கீழ்மலை கிராமங்களாக தாண்டிக்குடி, மங்களம்கொம்பு, தடியன் குடிசை, குப்பம்மாள்பட்டி, கே.சி.பட்டி, பெரியூர், பார்ச்சலூர், ஆடலூர், பன்றிமலை மற்றும் சுற்றுவட்டார கிராமங்கள் உள்ளன. இங்கு விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. காபி, மிளகு வாழை உள்ளிட்டவற்றை அப்பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். இந்த நிலையில் கொடைக்கானல் வனப்பகுதியை ஒட்டியுள்ள விவசாய நிலங்களில் அடிக்கடி ஒரு காட்டுயானை புகுந்து பயிர்களை சேதப்படுத்துகிறது.


குறிப்பாக பன்றிமலை அருகே உள்ள அழகுமடை, தோணிமலை பிரிவு, முருக்கடி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக காட்டுயானை ஒன்று சுற்றித்திரிகிறது. அந்த யானை அப்பகுதியில் உள்ள தோட்டங்களுக்குள் புகுந்து பயிர்களையும் நாசப்படுத்தி வருகிறது. தகவலறிந்து வரும் வனத்துறையினர் யானையை வனப்பகுதிக்குள் விரட்டினாலும் இரவில் மீண்டும் குடியிருப்பு பகுதிக்கு வந்து அட்டகாசம் செய்கிறது. இதனால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. எனவே காட்டுயானையை நிரந்தரமாக வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையிளர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags:    

மேலும் செய்திகள்