சத்துணவு கூடத்தை உடைத்த காட்டுயானை

சத்துணவு கூடத்தை உடைத்த காட்டுயானை

Update: 2023-07-15 19:30 GMT

பந்தலூர்

பந்தலூர் அருகே கொளப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி சத்துணவு கூடத்தை நேற்று முன்தினம் நள்ளிரவில் காட்டுயானை உடைத்து, 2 அரிசி மூட்டைகளை வெளியே தூக்கி வீசியது. பின்னர் அரிசியை தின்றது. மேலும் ரவிச்சந்திரன் என்பவரது தோட்டத்தில் புகுந்து விவசாய பயிர்களை நாசப்படுத்தியது. இதை அறிந்து வந்த பிதிர்காடு வனத்துறையினர், காட்டுயானையை விரட்டியடித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்