மரத்தில் தொங்கிய பலா பழத்தை துதிக்கையால் பறித்த காட்டு யானை
மரத்தில் தொங்கிய பலா பழத்தை துதிக்கையால் காட்டு யானை பறித்தது.
டி.என்.பாளையம்
ஈரோடு மாவட்டம் கடம்பூர் வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் காணப்படுகின்றன. இந்த யானைகள் அடிக்கடி வனப்பகுதியை விட்டு வெளியேறி அருகில் உள்ள விவசாய நிலங்களுக்குள் புகுந்து விடுகின்றன. தற்போது பலா பழம் சீசன் என்பதால் வனப்பகுதியையொட்டி உள்ள பலா மரங்களில் பழம் பழுத்து தொங்குகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் கடம்பூர் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை ஒன்று பவளக்குட்டை பகுதிக்கு வந்தது. பின்னா் அந்த பகுதியில் உள்ள பலா மரத்தின் அருகே சென்ற யானை, அங்கிருந்த பலா பழத்தை துதிக்கையால் பறித்து தின்றது. பழத்தை முழுவதுமாக தின்று முடித்ததும், யானை அங்கிருந்து வனப்பகுதிக்குள் சென்றது. இதை அந்த வழியாக சென்றவர்கள் தங்களுடைய செல்போனில் படம் பிடித்தனர்.