ஆசனூர் அருகே பஸ்யை வழிமறித்த காட்டு யானை - போக்குவரத்து பாதிப்பு

ஆசனூர் அருகே கரும்பு லாரி என்று நினைத்து காட்டு யானை பஸ்யை வழிமறித்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2022-07-11 09:04 GMT

தாளவாடி,

ஈரோடு மாவட்டம் தாளவாடி அடுத்த ஆசனூர் மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் யானைகள் தீவனம் மற்றும் தண்ணீர் தேடி சாலையை கடப்பது வழக்கம். அவ்வழியாக வரும் கரும்பு லாரிகள் வீசும் கரும்புகளை சாப்பிட்டு பழகிய யானைகள் தேசிய நெடுஞ்சாலையில் கரும்பு லாரிகளை எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றன.

இந்நிலையில் ஆசனூர் காரப்பள்ளம் சோதனைச்சவாடி அருகே கரும்புபாரம் ஏற்றி வருகிறதா என யானை ஒன்று சாலையில் உலா வந்தது. அப்போது அவ்வழியாக வந்த பஸ்சை யானை வழிமறைத்தது. இதனால் டிரைவர் பஸ்சை கொஞ்ச தூரத்திற்கு முன்பே நிறுத்தினார்.

அப்போது அவ்வழியாக வந்த லாரியை பார்த்து யானை கரும்பு லாரி வருகிறது என ஓடி சென்று லாரியை வழிமறைத்தது. அதில் கரும்பு இருக்கிறதா என லாரியை சுற்றி சுற்றி வந்தது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு தமிழகம்-கர்நாடக சாலையின் இடையே வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. சுமார் 15 நிமிடத்திக்கு பின் யானை வனப்பகுதியில் சென்றது பின்னர் வாகனங்கள் செல்ல துவங்கின.

Tags:    

மேலும் செய்திகள்