குடியிருப்புக்குள் புகுந்த காட்டு யானை
பந்தலூர் அருகே குடியிருப்புக்குள் புகுந்த காட்டு யானையால் தொழிலாளர்கள் அச்சம் அடைந்தனர்.
பந்தலூர்,
பந்தலூர் தாலுகாவில் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து, பயிர்கள் மற்றும் குடியிருப்புகளை சேதப்படுத்தி வருகின்றன. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு கோஸ்லேன்ட் தனியார் தோட்ட தொழிலாளர்கள் வசிக்கும் குடியிருப்புக்குள் ஒற்றை காட்டு யானை புகுந்தது. அங்கு குடியிருப்புகளை முற்றுகையிட்டது. இதனால் தொழிலாளர்கள் இயற்கை உபாதைகளை கழிக்க வெளியே செல்ல முடியாமல், வீட்டுக்குள்ளேயே முடங்கினர். அங்கு ராஜேந்திரன் என்பவரது வீட்டை யானை உடைத்தது. அப்போது வீட்டில் தூங்கி கொண்டிருந்த அவரது குடும்பத்தினர் சத்தம் கேட்டு, பின்புற வழியாக அருகே உள்ள வீட்டில் தஞ்சம் அடைந்்தனர். மேலும் குடிநீர்தொட்டி, பாத்திரங்களை காட்டு யானை தூக்கி வீசியது. இதனால் தொழிலாளர்கள் பீதி அடைந்தனர்.