காட்டு யானை திடீர் சாவு

ஆனைக்கட்டி அருகே பெண் காட்டு யானை திடீரென்று உயிரிழந்தது.

Update: 2023-06-19 20:45 GMT

ஆனைக்கட்டி

ஆனைக்கட்டி அருகே பெண் காட்டு யானை திடீரென்று உயிரிழந்தது.

வனத்துறையினர் ரோந்து

கோவை வனக்கோட்டம் வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் உள்ளன. கோவை கோட்ட வனப்பகுதி வலசை பாதையாக (வழிப்பாதை) இருப்பதால் யானைகள் கேரளாவில் இருந்து இடம்பெயர்ந்து செல்கின்றன.

அப்போது அவை மலைய டிவார பகுதிக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன.

இதைத்தடுக்க வனத்துறையினர், யானை பாதுகாப்பு படையினர், வேட்டைத்தடுப்பு காவலர்கள் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடு பட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் கோவை வனச்சரகம் ஆனைக்கட்டி அருகே வனப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து சென்றனர்.

யானை திடீர் சாவு

அவர்கள் அடர்ந்த வனப்பகுதியில் இருக்கும் மலைவாழ் கிராம மான தூமனூர் அருகே சென்றபோது வனப்பகுதிக்குள் ஒரு யானை இறந்து கிடந்தது.

இது குறித்து அவர்கள் உயர் அதிகாரிக ளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் மாவட்ட வன அதி காரி ஜெயராஜ் மற்றும் அதிகாரிகள் விரைந்து வந்து பார்வையிட ்டனர்.

அத்துடன் உயிரிழந்த யானையின் உடலையும் சோதனை செய்த னர். வனகால்நடை டாக்டர் அடங்கிய குழுவினர் உயிரிழந்த அந்த யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்தனர்.

இதில் உயிரிழந்தது பெண் யானை. அதற்கு 20 வயது இருக்கும்.

ஆனால் அந்த யானையின் உயிரிழப்புக்கான காரணம் தெரிய வில்லை. இதனால் யானையின் உடற்கூறு எடுக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

இது குறித்து வன ஆர்வலர்கள் கூறியதாவது:-

சீமைக்கருவேல மரங்கள்

ஆனைக்கட்டி, தடாகம், மாங்கரை வனப்பகுதியில் சீமைக் கருவேல மரங்கள் அதிகம் உள்ளன. அதில் இருக்கும் காய்களை யானைகள் விரும்பி சாப்பிடுகின்றன.

இதை அதிகமாக சாப்பி டும்போது விஷமாக மாறிவிடுகிறது. இதுவே பெரும்பாலான யானைகளின் உயிரிழப்புக்கு காரணமாக இருக்கிறது.

எனவே வனப்பகுதியில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அடியோடு வெட்டி அகற்ற வேண்டும். மேலும் யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் விரும்பி சாப்பிடும் புற்கள் மற்றும் மரங்களை நட வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

----

Reporter : J.JOSEPH_Staff Reporter Location : Coimbatore - Coimbatore

மேலும் செய்திகள்