தென்னை மரங்களை சேதப்படுத்திய காட்டு யானை

பந்தலூர் அருகே தென்னை மரங்களை காட்டு யானை சேதப்படுத்தியது. இதனால் பொதுமக்கள் பீதியடைந்தனர்.

Update: 2022-10-19 18:45 GMT

பந்தலூர், 

பந்தலூர் அருகே தென்னை மரங்களை காட்டு யானை சேதப்படுத்தியது. இதனால் பொதுமக்கள் பீதியடைந்தனர்.

காட்டு யானை

பந்தலூர் அருகே சேரம்பாடி, சோலாடி, கோரஞ்சால், சப்பந்தோடு சேரங்கோடு, படச்சேரி, நாயக்கன்சோலை உள்பட பல்வேறு பகுதிகளில் காட்டு யானைகள் நடமாடி வருகின்றன. அவை சேரம்பாடி-கோழிக்கோடு செல்லும் வாகனங்களை வழிமறித்து வருகின்றன. இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு படச்சேரி பகுதிக்குள் காட்டு யானை ஒன்று புகுந்தது. அங்கு எலிசபெத் என்பவரது வீடு பூட்டி கிடந்தது.

அந்த வீட்டை உடைத்து யானை உடைத்தது. பின்னர் யானை தும்பிக்கையை உள்ளை நுழைத்து உள்ளே இருந்த அரிசி மூட்டைகளை தூக்கி வெளியே வீசியது. மேலும் உணவு பொருட்களை தின்று சேதப்படுத்தியது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த வனகாப்பாளர் கிருபானந்தகுமார் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து காட்டு யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர்.

தொழிலாளர்கள் ஓட்டம்

இந்தநிலையில் சேரம்பாடி அருகே நாயக்கன்சோலை பகுதியில் ஒற்றை காட்டு யானை புகுந்தது. அங்கு பெருமாள் என்பவரது தோட்டத்தில் இருந்த பாக்கு, தென்னை மரங்களை மிதித்து சேதப்படுத்தியது. மேலும் குடியிருப்புகளை விடிய, விடிய முற்றுகையிட்டது.

பின்னர் அங்கிருந்த சென்ற காட்டு யானை, நேற்று நாயக்கன்சோலை அரசு பள்ளி அருகே உள்ள மாரியம்மன் கோவிலையொட்டி உள்ள தேயிலை தோட்டத்தில் நின்றது.

சேரம்பாடி வனச்சரகர் அய்யனார், வனவர் ஆனந்த் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் யானையை விரட்டினர். 

Tags:    

மேலும் செய்திகள்