கடையை உடைத்து பழங்களை சாப்பிட்ட காட்டு யானை

பர்லியாரில் நள்ளிரவில் கடையை உடைத்து பழங்களை சாப்பிட்டு காட்டு யானை அட்டகாசம் செய்தது.

Update: 2023-06-25 02:00 GMT

குன்னூர்

குன்னூர் -மேட்டுப்பாளையம் சாலையில் மரப்பாலம், கே.என்.ஆர்.நகர், பர்லியார் ஆகிய பகுதிகளில் தேயிலை மற்றும் காபி தோட்டங்கள் உள்ளன. இந்த தோட்டங்களில் ஊடுபயிராகவும், தனிப்பயிராகவும் பலா மரங்கள் நடவு செய்யப்பட்டுள்ளன. ஆண்டுதோறும் ஜூன் மாதம் தொடங்கி ஆகஸ்டு மாதம் வரை பலாபழ சீசன் இருக்கும். இதனால் பலாப்பழ சீசன் காலங்களில் சமவெளி பகுதிகளிலிருந்து காட்டு யானைகள் பர்லியார், கே.என்.ஆர்.நகர், மரப்பாலம் போன்ற பகுதிகளுக்கு வருகின்றன. இவ்வாறு வரும் காட்டு யானைகள் அடிக்கடி குன்னூர்-மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையிலும் ரெயில் பாதையிலும் நடமாடி வருகின்றன.

இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக இரவு பகலாக பர்லியார் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் காட்டு யானை உலா வருகிறது. நேற்று முன்தினம் நள்ளிரவில் ஒற்றை காட்டு யானை பர்லியார் கடைவீதியில் புகுந்தது. அப்போது மூடப்பட்டு இருந்த பழக்கடையின் கதவை உடைத்து அங்கிருந்த படிங்களை எடுத்து சாப்பிட்டு விட்டு சென்றது.

பழக்கடை வியாபாரி நேற்று காலை வந்து பார்த்ேபாது கடை யானையால் உடைக்கப்பட்டு பழங்கள் சேதமடைந்து இருந்தது தெரிய வந்தது. இதனால் அந்த பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். ஒற்றை யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என்று வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்