ரேஷன் கடை நுழைவு வாயிலை உடைத்த காட்டுயானை

ரேஷன் கடை நுழைவு வாயிலை உடைத்த காட்டுயானை

Update: 2023-06-22 19:45 GMT

பந்தலூர்

பந்தலூர் அருகே நெலாக்கோட்டை, விலங்கூர், கூவச்சோலை, விலங்கூர், 9-வது மைல், மேபீல்டு, கரியசோலை உள்ளிட்ட பகுதிகளில் காட்டுயானைகள் நடமாட்டம் காணப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் நெலாக்கோட்டை பஜாருக்குள் ஒற்றை யானை புகுந்தது. தொடர்ந்து வீடுகளையும், கடைகளையும் முற்றுகையிட்டது.

இதையடுத்து நெலாக்கோட்டையில் இருந்து கரியசோலை செல்லும் சாலையில் உள்ள ரேஷன் கடை வளாகத்தின் இரும்பு நுழைவு வாயிலை உடைத்தது. பின்னர் உள்ளே சென்று ரேஷன் கடையை உடைக்க முயன்றது. அதற்குள் தகவல் அறிந்து வந்த பிதிர்காடு வனச்சரகர் ரவி, வனவர் ஜார்ஜ் பிரவீன்சன் மற்றும் வனத்துறையினர் காட்டுயானையை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். மேலும் மீண்டும் வராமல் தடுக்க கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். சேதம் அடைந்த நுழைவு வாயிலை பந்தலூர் வட்ட வழங்கல் அலுவலர் மகேந்திரகுமார் மற்றும் வருவாய்துறையினர் பார்வையிட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்