கல்லூரி வகுப்பறையில் புகுந்த மரநாய் பிடிபட்டது
நெல்லை அருகே கல்லூரி வகுப்பறையில் புகுந்த மரநாய் பிடிபட்டது
நெல்லை அருகே தருவை பகுதியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் நேற்று 2 வயதுடைய மரநாய் புகுந்தது. அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்ததை கண்ட கல்லூரி நிர்வாகத்தினர் நெல்லை மாவட்ட வன அலுவலர் முருகனுக்கு தகவல் தெரிவித்தனர்.
அவரது உத்தரவுப்படி வனச்சரக அலுவலர் சரவணகுமார் மேற்பார்வையில் கால்நடை ஆய்வாளர் அர்னால்டு, வேட்டை தடுப்பு காவலர்கள் வசந்த், கந்தசாமி ஆகியோர் கல்லூரிக்கு விரைந்து சென்றனர். அங்கு வகுப்பறைக்குள் புகுந்து சுற்றிக்கொண்டிருந்த மரநாயை பத்திரமாக பிடித்தனர். பின்னர் அதனை சேரன்மாதேவி காப்பு காட்டில் விட்டனர்.