தொழில் அதிபர் இல்ல திருமண விழா
நெல்லையில் தொழில் அதிபர் இல்ல திருமண விழா நடந்தது.
தூத்துக்குடி காமராஜர் காய்கனி மார்க்கெட் தலைவரும், தொழில் அதிபருமான சி.த.சுந்தரபாண்டின் மகள் வழி பேரனும், நெல்லை தொழில் அதிபர் எம்.ஜார்ஜ் ஜெயசிங்-சுதாஞானராணி தம்பதியரின் மகனுமான ஜா.ரியான் எல்ஷன், நெல்லை மாவட்டம் ஆரைக்குளத்தை சேர்ந்த ஜெயக்குமார்-மேரி தம்பதியரின் மகள் ஜெ.ஜெனிஷா ஜெயக்குமார் ஆகியோரது திருமணம் நெல்லை பாளையங்கோட்டை கதீட்ரல் பேராலயத்தில் வைத்து நடந்தது. இதனை தொடர்ந்து பாளையங்கோட்டை-தூத்துக்குடி ரோட்டில் உள்ள மாதா மாளிகையில் திருமண விழா நிகழ்ச்சிகள் நடந்தன.
விழாவில் தமிழ்நாடு சபாநாயகர் அப்பாவு, சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அப்துல் வகாப், நெல்லை மாநகராட்சி மேயர் சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, தொழில் அதிபர்கள் சி.த.சுந்தரபாண்டியன், எஸ்.டி.எஸ்.ஞானராஜ், எஸ்.டி.எஸ்.மணிராஜ் மற்றும் தொழில் அதிபர்கள், முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
விழாவுக்கு வந்தவர்களை மணமக்கள் குடும்பத்தினர் வரவேற்றனர்.