தோட்டங்களில் பறிக்காமல் காய்ந்து வீணாகும் தக்காளி

பாகலூர் பகுதியில் தக்காளி விலை வீழ்ச்சியால் தோட்டங்களில் பறிக்காமல் காய்ந்து வீணாகிறது.

Update: 2022-08-27 16:31 GMT

ஓசூர்

ஓசூர் அருகே பாகலூர், பெலத்தூர் மற்றும் சுற்று பகுதிகளில் பல ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் தக்காளியை பயிரிட்டுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு உச்சத்தில் இருந்த தக்காளி விலை தற்போது கடும் வீழ்ச்சி அடைந்து 24 கிலோ எடை கொண்ட ஒரு கூடை ரூ.50 முதல் ரூ.100 வரை ரகத்திற்கு ஏற்றவாறு விற்பனையாகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இது குறித்து விவசாயிகள் கூறுகையில், பாகலூர் பகுதியில் அதிக அளவில் தக்காளி பயிரிட்டோம். கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை 24 கிலோ எடை கொண்ட ஒரு தக்காளி கூடை ரூ.500-க்கு விற்கப்பட்டது. தற்போது தக்காளி விலை கடும் வீழ்ச்சி அடைந்து ஒரு கூடை ரூ.50 முதல் அதிகபட்சமாக ரூ.100 வரை விற்பனையாகிறது. தக்காளி பயிரிட செலவு செய்த பணம் கூட கிடைக்கவில்லை. கூடுதல் செலவு எதற்கு என்று கருதி தக்காளியை பறிக்காமல் தோட்டத்திலேயே விட்டுவிட்டோம். இதனால் தக்காளிகள் காய்ந்து அழுகி விணாகி வருகிறது என்று கவலையுடன் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்