ஆழமான பகுதியில் எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும்

நன்னிலம் அருகே கங்களாஞ்சேரி வெட்டாற்றில் ஆழமான பகுதியில் எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும் என்று பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.

Update: 2023-09-26 19:15 GMT

நன்னிலம்;

நன்னிலம் அருகே கங்களாஞ்சேரி வெட்டாற்றில் ஆழமான பகுதியில் எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும் என்று பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.

வெட்டாறு

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே கங்களாஞ்சேரி வெட்டாற்றின் சட்ரஸ் அருகே தண்ணீர் ஓடும் பகுதியில் 20 அடி ஆழ பள்ளம் உள்ளது. அந்த பகுதியில் தினமும் ஏராளமான மக்கள் குளித்து வருகிறார்கள். இந்த பகுதியில் ஆழம் அதிகமாக உள்ளதால் உயிரிழப்புகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது என அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள். இந்த பகுதியில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு ஒரு வாலிபர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

எச்சரிக்கை பலகை

எனவே நன்னிலம் அருகே கங்களாஞ்சேரி வெட்டாற்றின் சட்ரஸ் அருகே தண்ணீர் ஓடும் பகுதியில், இந்த பகுதி ஆழமான பகுதி. இங்கு யாரும் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.

Tags:    

மேலும் செய்திகள்