திருத்தணியில் ஆக்கிரமிப்பு இடத்தில் எச்சரிக்கை பலகை

திருத்தணியில் ஆக்கிரமிப்பு இடத்தில் எச்சரிக்கை பலகையை தாசில்தார் உத்தரவின் பேரில் வருவாய் ஆய்வாளர் வைத்தார்.

Update: 2023-08-24 15:02 GMT

திருத்தணி நகராட்சி ஜெ.ஜெ.ரவி நகர் பகுதியில் உள்ள 1½ ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தை அப்பகுதியில் உள்ள சிலர் ஆக்கிரமித்து உள்ளதாகவும், அவற்றை மீட்கும்படி திருத்தணி நகராட்சி 21-வது வார்டு கவுன்சிலர் விஜய் சத்யா மாவட்ட கலெக்டரிடம் புகார் மனு அளித்தார். இதையடுத்து மாவட்ட கலெக்டர் உத்தரவின் பேரில் திருத்தணி வருவாய் ஆர்.டி.ஓ. தீபா மேற்பார்வையில், திருத்தணி தாசில்தார் மதன் தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள் கடந்த மாதம் ஜெ.ஜெ.ரவி நகர் பகுதியில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதாக புகார் அளிக்கப்பட்ட இடத்தில் நிள அளவீடு செய்தனர். இதில் அரசு நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில் நேற்று ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்தில், 'இந்த இடம் அரசுக்கு சொந்தமான இடம், மீறி ஆக்கிரமிப்பில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்' என எச்சரிக்கை பலகையை தாசில்தார் உத்தரவின் பேரில் வருவாய் ஆய்வாளர் கமல் வைத்தார். இந்த இடத்தை மீட்டு பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பூங்கா அமைக்க வேண்டும் என கவுன்சிலர் விஜய்சத்யா கோரிக்கை வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்