தொழிலாளியை வெட்டிய வழக்கில் தேடப்பட்ட வாலிபர் கைது

சாத்தான்குளத்தில் தொழிலாளியை வெட்டிய வழக்கில் தேடப்பட்ட வாலிபரை போலீசார் கைது

Update: 2023-01-01 18:45 GMT

தட்டார்மடம்:

சாத்தான்குளம் அழகம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 62). நகை தொழிலாளியான இவர் கடந்த அக்டோபர் 1-ந்தேதி புது வேதக்கோயில் தெருவில் உள்ள நகை பட்டறையில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு காரில் வந்த மர்ம நபர்கள் 3 பேர் சுப்பிரமணியனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் மறைத்து வைத்திருந்த அரிவாளால் வெட்டிவிட்டு தப்பினர்.

இதுகுறித்து சுப்பிரமணியன் சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஜாண்சன் விசாரணை நடத்தி பன்னம்பாறையைச் சேர்ந்த மாடசாமி மகன் சூரியா (22), சடையன்கிணறு கிராமத்தைச் சேர்ந்த முத்துராமலிங்கம் மகன் சூரிய மூர்த்தி (22) உள்ளிட்ட 3 பேர் வழக்குபதிவு செய்து தேடி வந்தார். இதற்கிடையே வேறு வழக்கில் சூரியா கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். இந்நிலையில் இன்ஸ்பெக்டர் முத்து தலைமையிலான தனிப்படை போலீசார் சடையன்கிணறு பகுதியில் பதுங்கி இருந்த சூரியமூர்த்தியை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள மற்றொருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்