காத்திருப்பு போராட்டம்
சி.பி.எஸ். ஒழிப்பு இயக்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தி.மு.க.வின் சட்டமன்ற தேர்தல் வாக்குறுதிபடி சி.பி.எஸ். திட்டத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். சி.பி.எஸ் திட்டத்தில் ஓய்வு பெற்ற, இறந்த, ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு பணிக்கொடை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று கரூர் கலெக்டர் அலுவலகம் முன்பு கரூர் மாவட்ட சி.பி.எஸ் ஒழிப்பு இயக்கம் சார்பில் 24 மணி நேர காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அரசகுமார் தலைமை தாங்கினார். கால்நடை ஆய்வாளர் சங்க மாவட்ட செயலாளர் பாபு வரவேற்றார். தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க முன்னாள் மாநில துணைத்தலைவர் மகாவிஷ்ணன், மாநில செயலாளர் விஜயகுமார் கண்டன உரையாற்றினர். இதில் சி.பி.எஸ் ஒழிப்பு இயக்க மாநில ஆலோசகர் கண்ணன், தமிழ்நாடு வருவாய் கிராம உதவியாளர் சங்க மாவட்ட செயலாளர் சுரேஷ்குமார் உள்பட பலர் கொண்டனர்.