பெண் குளிப்பதை வீடியோ எடுத்த3 சிறுவர்கள் மீது வழக்கு

காரமடையில் பெண் குளிப்பதை வீடியோ எடுத்த 3 சிறுவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

Update: 2023-09-24 23:30 GMT

காரமடை,


காரமடை பகுதியில் 30 வயது பெண் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டில் உள்ள குளியலறையில் குளித்து கொண்டிருந்துள்ளார். அப்போது அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுவர்கள் 3 பேர் அந்த பெண் குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்ததாக தெரிகிறது. இதனைக்கண்ட அந்த கூச்சலிட்டார். இதனால் பயந்துபோன சிறுவர்கள் அங்கிருந்து தப்பிச்சென்றனர்.


இந்த சம்பவம் குறித்து அந்்த பெண் காரமடை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில் போலீசார் 3 சிறுவர்களையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் அந்த பெண் குளிப்பதை வீடியோ எடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் 3 சிறுவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, எச்சரித்து காவல் நிலைய ஜாமீனில் விடுவித்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்